×

8ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்; இன்று முதல் மக்கள் மனு அளிக்க கலெக்டர் அழைப்பு

புதுக்கோட்டை, ஜன.4: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டம், மணமேல்குடி சரகம், மும்பாலை வருவாய் கிராமத்தில் வரும் 8 தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகிக்கிறார்.

முகாம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (4ம் தேதி) முதல் பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் மும்பாலை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பெறப்பட உள்ளது. இதனால் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 8ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்; இன்று முதல் மக்கள் மனு அளிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Pudukkottai District ,Collector ,Aruna ,Mumpalai Revenue Village ,Manamelkudi Taluk ,Manamelkudi Saragam ,Aranthangi Kottam ,Pudukkottai District.… ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய...