×

கொடநாடு வழக்கில் தொடர்பு படுத்தியதால் நஷ்டஈடு கோரி வழக்கு இபிஎஸ்சுக்கு எதிரான கருத்துக்களை நீக்கம் செய்து மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேத்யூ சாமுவேல் தாக்கல்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டஈடு கோரி 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மனு தாக்கல் செய்யுமாறு மேத்யூ சாமுவேல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். அப்போது, மேத்யூ சாமுவேல் தரப்பில், தேவையற்ற கருத்துக்களை நீக்கம் செய்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வேறு ஏதேனும் கருத்துக்களை நீக்க வேண்டுமா என்பது தொடர்பாக தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கொடநாடு வழக்கில் தொடர்பு படுத்தியதால் நஷ்டஈடு கோரி வழக்கு இபிஎஸ்சுக்கு எதிரான கருத்துக்களை நீக்கம் செய்து மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேத்யூ சாமுவேல் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Matthew Samuel ,Chennai High Court ,EPS ,Kodanadu ,Chennai ,Chief Public Secretary ,Edapadi Palanisami ,Delhi ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...