சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தாம்பரம்-திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, ரயில் எண்(06190) திருச்சி-தாம்பரம் இடையே ஜன்சதாப்தி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் ஜன.4,5 மற்றும் 10,11,12,13,17,18 மற்றும் 19ம் தேதி இயக்கப்படும். மறுமார்க்கத்தில், ரயில் எண்(06191) தாம்பரம்-திருச்சி ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ், தாம்பரத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில் ஜன.4,5 மற்றும் 10,11,12,13,17,18 மற்றும் 19ம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயிலில் 2 ஏசி சேர் கார், 12 சேர் கார், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ரூட்டி, சிதம்பரம், சீர்காழி,மயிலாடுதுறை,கும்பகோணம்,பாபநாசம்,தஞ்சாவூர், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
The post பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில்: ஜன.10 முதல் 17 வரை இயக்கப்படுகிறது appeared first on Dinakaran.