×

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: முத்துக் கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள்


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை முத்துக் கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்றுமுன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து பகல்பத்து உற்சவம் நடைபெற்து வருகிறது. 4ம் நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் நீல நிற பட்டு அணிந்து, முத்துக் கிரீடம், வைர நெத்திச்சூடி, ரத்தின அபய ஹஸ்தம், வைர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்து சரம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாள், மூலவரை தரிசனம் செய்து வருகின்றனர். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் 10ம் ேததி துவங்குகிறது.

The post ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: முத்துக் கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Vaikunta Ekadashi festival in Srirangam ,Namperumal ,Trichy ,Vaikunta Ekadashi festival ,Srirangam Ranganathar Temple ,Vaikunta of the Earth… ,Srirangam ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா:...