×

திருவரங்குளம் பிடாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

புதுக்கோட்டை,ஜன.1: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோயில் உள்ளது. ஊரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இக்கோயிலில் வாரம் தோறும் நடைபெற்று வரும் ராகுகால பூஜை ஆண்டு விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

The post திருவரங்குளம் பிடாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvarankulam Bidariamman Temple ,Pudukkottai ,Pidariamman Temple ,Pudukkottai District Thiruvarankulam ,Rakukala Pooja ,Ambala ,
× RELATED புதுக்கோட்டை மாணவி மரணம்: ஸ்வாப்...