×

ஜன.9 முதல் பொங்கல் பரிசு விநியோகம்

 

விருதுநகர், ஜன.7: ரேஷன் கடைகளில் ஜன.9 முதல் பொங்கல் பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: தை பொங்கலுக்கு அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜன.9ம் தேதி முதல் விநியோகம் தொடங்க உள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் ஜன.3 முதல் ஜன.8 வரை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன்கடைகளில் விற்பனை எந்திரத்தில் பயோ மெட்ரிக் மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விபரம் கார்டுதாரர் செல்போனிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ரேசன்கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். புகார்களை 04562-252680, 04562-252016 எண்களில் தெரிவிக்கலாம். டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு பொருட்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post ஜன.9 முதல் பொங்கல் பரிசு விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jayaseelan ,
× RELATED மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்