- டெனி
- பிறகு நான்
- தேனி மாவட்ட நீதிமன்றம்
- டெனி பார் சங்கம்
- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீ
- ஜனாதிபதி
- வழக்கறிஞர்கள் சங்கம்
- சந்தானகிருஷ்ணன்
- தின மலர்
தேனி, ஜன.7: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் நுழைவுவாயில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார், இணைச்செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தரக்கோரியும் வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், போடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கணேசன், தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், பெண் வழக்கறிஞர்கள் வித்யா, பிரியங்கா கிருஷ்ணவேணி, மூத்த வழக்கறிஞர் கணேசன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் நேற்று ஒரு நாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
The post பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி தேனியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.