×

பெண் குழந்தையை தத்தெடுத்த அபிராமி

சென்னை: திரைப்பட நடிகைகள் நேரடியாக குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, தத்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் அபிராமி. அர்ஜூன் நடித்த ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அபிராமி. அதன் பிறகு ’மிடில் கிளாஸ் மாதவன்’ ’சமுத்திரம்’ ’சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கமல்ஹானுடன் நடித்த ’விருமாண்டி’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.

ராகுல் பாவணன் என்ற தொழிலதிபரை 2009ம் ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலான அபிராமி மீண்டும் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக அவர் ‘தி கோடை மர்டர் மிஸ்ட்ரி’ என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த நிலையில் அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நானும் ராகுலும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததன் மூலம் பெற்றோராகியுள்ளோம். கல்கி என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை நாங்கள் கடந்த ஆண்டு தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அது முதல் எங்கள் வாழ்க்கை வித்தியாசமாக மாறி உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

The post பெண் குழந்தையை தத்தெடுத்த அபிராமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Abraami ,Chennai ,Arjun ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் Shock ஆகிட்டேன் ! Umapathy❤Aishwarya Arjun Wedding Get Together Meet | Arjun, Thambi Ramaiah.