சென்னை: அண்ணாமலை பற்றி விமர்சித்ததற்காக பாஜவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் புகார் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த 27ம் தேதி பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில், “அரசியலே தெரியாத ஒரு கோமாளியாக இருக்கனும் என்றால் அது அண்ணாமலை தான். இது ஒரு பைத்தியக்காரத்தனமான விஷயம். கோமாளித்தனம் என்று சொல்ல வேண்டும். அண்ணமலையை தலைவராக செலக்ட் பண்ணுனவங்க தான் தன்னத்தானே சவுக்கால் அடித்து கொள்ள வேண்டும்.
இனி அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட மாட்டார். ஆட்சி அமைக்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் நான் செருப்பு போட மாட்டேன். வேட்டி கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் டேஞ்ஜராகி இருக்கும். பட்டாப்பட்டியோட அலைய வேண்டியதாக ஆகியிருக்கும்.
தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு அண்ணாமலை. அவர் சவுக்கால் அடித்ததை பார்த்து எங்கள் வீட்டில் பயங்கர காமெடி. குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்த இந்த சவுக்கடி சீனை எல்லா காமெடி சேனலிலும் போட்டால் அண்ணாமலைக்கு பிரபலத்தன்மை கிடைக்கும்.
அண்ணாமலையின் ஒவ்வொரு செய்கையும், ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு தடவையும் 100 ஓட்டு, 1000 ஓட்டு என பாஜவின் வாக்கை வெளியேறி வருகிறது’’ என்று கூறியிருந்தார். அண்ணாமலை பற்றி விமர்சித்ததற்காக பாஜவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், ‘‘பாஜ தலைவர் அண்ணாமலை தன்னை சவுக்கால் அடித்து கொண்டது பற்றி என் கருத்தை சமூக வலைத்தளங்களில் பேசினேன்.
இதனால், தமிழக பாஜ தொண்டர்களை எனக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவது போல என் தொலைபேசி எண்ணை பொதுத்தளங்களில் வெளியிட்டு எனக்கு மிரட்டல்கள் விடுத்து கொண்டிருக்கிறார்கள். என் அலைபேசி எண்ணை பொதுவெளியினல் என் அனுமதியின்றி பேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தகுந்த பாதுகாப்பையும், எனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த தூண்டியவர்கள் மீதும் உடனடியாக தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post அண்ணாமலை பற்றி கடும் விமர்சனம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாஜவினர் கொலை மிரட்டல்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.