கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன். வள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் கனவாக இருந்தது. கலைஞர் வைத்த சிலையை போற்றக்கூடிய வகையில் வெள்ளி விழாவை திராவிட ஆட்சியில் நடத்தியதில் பெருமைப்படுகிறேன். கலைஞர் வழியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதுதான் எனது வாழ்நாள் கடமை.திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கலைஞர் வழியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதுதான் எனது வாழ்நாள் கடமை :முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.