தர்மபுரி, டிச.31: ஆங்கில புத்தாண்டு நாளை (1ம்தேதி) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு தினத்தில் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி, ஒருவருக்கொருவர் கேக்குகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். தர்மபுரி நகரில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் கேக்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அரை கிலோ முதல் 5 கிலோ வரை, விதவிதமான வண்ணங்களில் கேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் உள்ள பேக்கரிகளில், நூற்றுக்கணக்கான வகைகளில் கேக்குகள் பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து இவற்றை வாங்கி செல்கின்றனர். புத்தாண்டையொட்டி 10 ஆயிரம் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஹனி கேக், ஐஸ்கிரீம் கேக் என விதவிதமான கேக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
The post புத்தாண்டையொட்டி கேக் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.