×

கும்மிடிப்பூண்டி பஜாரில் அண்ணா பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு மற்றும் 61 ஊராட்சி சேர்ந்த மாதர்பாக்கம், ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, அயநெல்லுர், பன்பாக்கம், பெருவாயில், சோழியம்பாக்கம், குருவாட்டுச்சேரி, நத்தம், கண்ணன்பாக்கம், பல்லவாடா, போந்தவாக்கம், செதில்பாக்கம், கரடிபுத்தூர், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட பொன்னேரி, ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு காய்கறி, மளிகை சாமான், வெளியூர் செல்பவர்கள் மற்றும் காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகத்திற்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் பயணித்து வருகின்றனர்.

இதில் ஏற்கனவே இருந்த மேற்கூரைகள் வர்தா புயல் பல்வேறு புயல் காரணமாக சேதமடைந்தது. அதனை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மீது பாதிக்காத வகையில் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் பஜார் பேருந்து நிலையத்தை மழை வெயிலிலும் நின்றபடி பயணித்தனர். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தன்னுடைய சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தற்காலிக கூடாரம் அமைத்து இரண்டு வருட காலமாக அதை அமர்ந்து பொதுமக்கள் பயணித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தை புதிதாக அமைக்க வேண்டுமென தனியாரிடம் சிஎஸ்ஆர் நிதியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கும்மிடிப்பூண்டி பஜார் பேருந்து நிலையத்தில் புதிய மேற்கூரை அமைத்து, மழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் நேற்று மதியம் திடீரென ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, பேருந்து நிலையத்தை வரைபடத்தை பார்த்து பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பேருந்து வளாகத்தை எம்எல்ஏ நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அந்த நிதியில் நவீன முறையில் குடிநீர், செல்போன் சார்ஜர், அமரும் இடம், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் வரவேற்றனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பொருளாளர் ரமேஷ், நகர செயலாளர் அறிவழகன், பேருராட்சி எழுத்தர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், துணை தலைவர் கேசவன், துணை செயலாளர் மஸ்தான், இளைஞர் அணி அமைப்பாளர் சாண்டிலியன்,கவுன்சிலர ஏமெய்யழகன், ஏனாதிமேல்பாக்கம் குமார், தண்டலச்சேரி அருள், ரெட்டம்பேடு ரவி, சகாதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பஜாரில் அண்ணா பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Anna Bus Stand ,Gummidipoondi Bazaar ,T.J. Govindarajan ,MLA ,Gummidipoondi ,Gummidipoondi Panchayat ,Matharpakkam ,Aathupakkam ,Redtampedu ,Ayanelloor ,Panpakkam ,Peruvayil ,Chozhiyambakkam ,Guruvaducherry ,Natham ,Kannanpakkam ,Pallavada ,Ponthavakam ,Sethilpakkam ,Karadiputhur ,Thervai Kandigai ,Ponneri ,Uthukottai… ,
× RELATED கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இரவு பகலாக மழை நீர் வெளியேற்றம்