சிவகங்கை: உப்பு போட்ட பாப்கார்னுக்கு ஒரு வரி, உப்பு போடாத பாப்கார்னுக்கு ஒரு வரி என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். சிவகங்கையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; மன்மோகன் சிங் இறப்பு இந்தியாவுக்கு பெரிய இழப்பு. மன்மோகன் சிங்கின் சிந்தனை, கருத்துக்கள் புதிய பாதையை இந்தியாவில் வகுத்துள்ளது. 20 கோடி ஒன்றிய வர்க்கத்திற்கு முழுக்க முழுக்க காரணம் மன்மோகன் சிங்தான். மன்மோகன் சிங்கால் 24 – 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து முன்னேறியுள்ளனர்.
மேலும், அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும். ஆனால், ஆளுநர்கள் அதில் வரம்பு மீறி தலையிடுவது தான் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் தான் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. உப்பு போட்ட பாப்கார்னுக்கு ஒரு வரி, உப்பு போடாத பாப்கார்னுக்கு ஒரு வரி என உலகத்திலேயே விந்தையான ஜி.எஸ்.டி. இந்தியாவில் தான் உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
The post உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில்தான்.. உப்பு போட்ட பாப்கார்னுக்கு ஒரு வரி, உப்பு போடாததுக்கு ஒரு வரி: ப.சிதம்பரம்! appeared first on Dinakaran.