×

கட்டணமில்லா கணினி பயிற்சி, தையல் பயிற்சி பள்ளி திட்டத்திற்கு “முதல்வர் படைப்பகம்” என்ற பெயரையே சூட்டவேண்டும்: திரு.வி.க. மண்டலக் குழுத் தலைவர் கோரிக்கை

சென்னை: கட்டணமில்லா கணினி பயிற்சி, தையல் பயிற்சி பள்ளி திட்டத்திற்கு “முதல்வர் படைப்பகம்” என்ற பெயரையே சூட்டவேண்டும் என திரு.வி.க. மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, இன்று (30.12.2024) சென்னை, ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் துவக்குவதற்கு முன் இனிவரும் காலங்களில் “முதல்வர் படைப்பகம்” என்ற சால சிறந்த திட்டத்தின் பெயரையே சூட்டவேண்டும் என சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் திரு.வி.க. நகர் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார் கோரிக்கை.

இன்று சென்னை, ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மண்டலம்-6, 58-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி ஸ்ரீதர் பேசியதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அளப்பரியா நல்ல திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றினார் அதில் மகளிர் சுய உதவிக் குழுவின் கடன்கள் தள்ளுபடி, பெண்களின் முன்னேற்றத்திற்காக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருநங்கைகளின் நலன் காக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்து ஒன்றியத்திற்கே வழிகாட்டும் முதன்மை முதல்வராக இருக்கிறார்.

அதுபோல பொருளாதார நிலையை உயர்த்த பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்த எங்கள் கழகத் தலைவர் முதலமைச்சர் இதே மாமன்றத்தில் மேயராக இருந்த பொழுது பல புரட்சிகரமான திட்டங்களுக்கு வித்திட்டவர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் உயர கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி ஆகிய திட்டங்களைத் தன்னுடைய சொந்த முயற்சியால் தொடங்கினார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் இது போன்ற திட்டங்களை கொண்டு வந்த முதல்வர் அல்ல எங்கள் முதல்வர் இன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும், மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தத் பயிற்சி பள்ளி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு குறிப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்படைகின்றனர் சுய தொழில் செய்யும் அளவிற்கு வாழ்வாதாரத்தை சிறப்படைய செய்தது இந்தத் திட்டம் இது போன்ற பயிற்சி பள்ளிகள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உன்னதமான திட்டத்தை வணக்கத்திற்குரிய மேயர் ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக இந்த பயிற்சி பள்ளி கொண்டு வருவதற்குண்டான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் தரும் மக்களின் கோரிக்கைகள் என்றாலும் சரி, தனியாக எழுத்து வடிவமாக தரும் கோரிக்கைகள் என்றாலும் சரி, இந்த மன்றத்தின் வாயிலாக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படியும், துணை முதலமைச்சரின் ஆக்கபூர்வமான செயல்களின்படியும், அனைத்து பணிகளையும் அவர்களின் வழியாக வணக்கத்திற்குரிய மேயர் நிறைவேற்றித் தருகிறார் அதுபோல இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி த் தருவார் என்று நம்புகிறோம்.

இதற்கு பதிலளித்து பேசிய 6-வது மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ் குமார் :

எனக்கு முன்பு உரையாற்றிய சகோதரியும் மாமன்ற உறுப்பினருமான ராஜேஸ்வரி ஸ்ரீதர் மேற்கோள் காட்டிய அரும்பெரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வார்டின் மாமன்ற உறுப்பினராகவும் மண்டல குழு தலைவராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தத் திட்டம் என்பது நம் முதல்வர் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுதே அவரின் சீரிய சிந்தனையில் தோன்றிய திட்டமாகும். மேலும் இத்திட்டத்தின் பயனடைந்த பயனாளிகளின் சுயமரியாதை உயர்ந்தது மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதார நிலையும் மேன்மை அடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் நம் முதல்வரை மனதார வாழ்த்தும்போது அதனை கண்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டத்தினை மீதமுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் (12 மண்டலங்களுக்கும்) விரிவாக்கம் செய்யும் தருவாயில் முதல்வரின் கனவும் மெய்ப்படும், அப்பகுதியை சார்ந்த மக்களின் வாழ்வாதாரமும் உயரும். இத்தகைய அருமையான திட்டத்தினை மற்ற மண்டலங்களில் நிறுவும் பொழுது அத்திட்டத்திற்கு “முதல்வர் படைப்பகம்” என்ற சாலச் சிறந்த பெயரினைச் சூட்டி இந்த மாமன்றம் பெருமை கொள்ளட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.

 

The post கட்டணமில்லா கணினி பயிற்சி, தையல் பயிற்சி பள்ளி திட்டத்திற்கு “முதல்வர் படைப்பகம்” என்ற பெயரையே சூட்டவேண்டும்: திரு.வி.க. மண்டலக் குழுத் தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : V. ,K. ,Zonal Committee ,Chennai ,V. K. Zonal Committee ,Sarita Mahesh Kumar ,K. Zonal Committee ,Dinakaran ,
× RELATED எஸ்.வி.சேகருக்கான ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!