×

தமிழை ஆட்சி மொழியாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்

*நெல்லையில் அமைச்சர் சுவாமிநாதன் பேச்சு

நெல்லை : தமிழை ஆட்சிமொழியாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என நெல்லையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாளை சாராள் தக்கர் மகளிர் பள்ளியில் நடந்த 250 பேர் கவிதை பாடி உலக சாதனைக்கு முயற்சித்தவர்களுக்கு விருது வழங்கி அமைச்சர் சுவாமிநாதன் பேசினார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கலைஞரும், திராவிட நல் திருநாடும் என்ற தலைப்பில் 250 பேர் கவிதை பாடி உலக சாதனை முயற்சி நேற்று காலை பாளை பஸ் நிலையம் அருகேயுள்ள சாராள் தக்கர் மகளிர் பள்ளியில் நடந்தது.

இதைத்தொடர்ந்து னையடுத்து பரிசளிப்பு விழாவும் சாராள் தக்கர் மகளிர் பள்ளியில் நேற்று மாலையில் நடந்தது. விழாவிற்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தார். வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் மாலைராஜா முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சுவாமிநாதன் பேசியதாவது:

தமிழர்களின் தாய் மொழியான தமிழ் மொழி உலகளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் உள்ள மொழிகளில் தமிழ் மொழி மிகவும் பழமையான ஒன்றாகும். இம்மொழி பல்வேறு நாடுகளிலும் தற்போது பேச்சு வழக்கில் உள்ளது. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழ் மொழியை கொண்டு வர வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். இவற்றை அறிவிப்பதற்கு ஒன்றிய அரசு முன் வரவேண்டும். தமிழ் இலக்கியம் (பி.ஏ.) படித்தவர்களுக்கு அரசுப் போட்டித் தேர்வு மூலம் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையில் உதவி இயக்குநர் பதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 5 வயது பெண் குழந்தையான முத்தமிழ் என்பவர் திருக்குறளை கூறி அதற்கான விளக்கம் கூறியதால் அதற்கு திராவிட செல்வி விருது அமைச்சர் வழங்கினார். பின்னர் 280 கவிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். நிகழ்வில் மகளிர் தொண்டர் அணி மாநில துணைச்செயலாளர் விஜிலா சத்யானந்த், இலக்கிய அணி துணைத்தலைவர் தங்கபாண்டியன், தொண்டர் அணி ரபீக், சின்னத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post தமிழை ஆட்சி மொழியாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : EU government ,Nellai Minister ,Swaminathan ,Nelella ,Pali Saral Thakkar Women's School ,Deputy Principal ,Udayaniti Stalin ,Union Government ,
× RELATED வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக...