வேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் தாலுகா தகட்டூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. முன்னதாக விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் நேற்றுமுன்தினம் (டிச.28ம் தேதி) தேமுதிக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேதாரண்யம் தாலுகா தகட்டூரில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியினை தேமுதிக நாகை மாவட்ட பொருளாளர் மோகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாகை மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் இ.கே.ராம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றிய கழக அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கழக பொருளாளர் பன்னீர் செல்வம், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மணிமாறன், மாவட்டபிரதிநிதி சற்குணம், கேப்டன் மன்ற செயலாளர் செந்தில் உள்ளிட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேமுதிக மாவட்ட பொருளாளர் மோகன் பரிசுகளை வழங்கினார்.
The post விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: தகட்டூரில் சதுரங்க போட்டி 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.