×

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு சுயநினைவில்லை: தேஜஸ்வி யாதவ் விளாசல்

பாட்னா: பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவிடம், ‘’முதல்வர் நிதிஷ் குமாருக்கு இன்னொரு சக்தி வாய்ந்த முகம் இருப்பதாக பேசப்படுகிறதே” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “இந்த வதந்திகளில் எந்த பொருளும் இல்லை.

நிதிஷ் குமாரால் இனி முன்புபோல் சாதாரணமாக செயல்பட முடியாது. அவருக்கு இப்போது சுய நினைவில்லை. அவரால் பீகாரை வழி நடத்த முடியவில்லை. நிதிஷ் குமார் சொந்தமாக முடிவுகளை எடுக்கவில்லை. அவர் தன் கட்சியை சேர்ந்த நான்கு தலைவர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருக்கும் இரண்டு பேரும் மற்றும் இங்குள்ளவர்கள் நிதிஷ் மீது தாக்குதல் நடத்துகின்றனர்” என்று காட்டமாக விமர்சித்தார்.

The post பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு சுயநினைவில்லை: தேஜஸ்வி யாதவ் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Tejaswi Yadav ,Patna ,Rashtriya ,Janata Dal ,Bihar Legislative Assembly ,Tejaswi ,
× RELATED பீகார் முதல்வர் நிதிஷின் சொத்து மதிப்பு ரூ1.64 கோடி