×

கூனியூர், காருகுறிச்சியில் ரூ.16.6 லட்சத்தில் 5 புதிய டிரான்ஸ்பார்ம்கள்

வீரவநல்லூர்,டிச.28: சேரன்மகாதேவியை அடுத்த கூனியூர், காருகுறிச்சி, தெற்கு காருகுறிச்சி பகுதிகளில் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு ரூ.16.6 லட்சம் மதிப்பில் 5 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி கூனியூர், காருகுறிச்சி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நிகழ்ச்சியில் இளநிலை மின் பொறியாளர் வள்ளி, கூனியூர் ஊராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் வீரவநல்லூர் பிரிவு கள பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூனியூர், காருகுறிச்சியில் ரூ.16.6 லட்சத்தில் 5 புதிய டிரான்ஸ்பார்ம்கள் appeared first on Dinakaran.

Tags : Kooniyur, Karukurichi ,Veeravanallur ,Kooniyur ,Karukurichi ,South Karukurichi ,Cheran Mahadevi ,Dinakaran ,
× RELATED மாநில அட்டயா பட்யா போட்டி ஸ்காட்...