×

தஞ்சாவூரில் மின்சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், டிச. 27: தஞ்சாவூரில் மின் சிக்கன வாரவிழாவை முன்னிட்டு மின் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் சார்பாக மின் சிக்கன வாரவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

அதன் ஒரு பகுதியாக நேற்று மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை மணிமண்டபம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணவேணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு மின் சக்தி சிக்கனம், தேவை இக்கணம், குமிழ் விளக்கை மறுத்து குழல் விளக்கை பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பல்வேறு பகுதிகள் வழியாக சென்று ரயிலடியில் பேரணி முடிவடைந்தது. முடிவில் செயற்பொறியாளர் விமலா நன்றி கூறினார் .

The post தஞ்சாவூரில் மின்சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Minsikana Week Awareness Rally ,Thanjavur ,Electricity Economy Week ,Energy Savings Week ,Thanjavur E-Sharing Circle ,Minsikana Week Awareness Rally in Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட...