- திருப்பூர் மாவட்டம்
- திருப்பூர்
- கலெக்டர்
- கிறிஸ்துராஜ்
- உச்ச நீதிமன்றம்
- பல்ராம் சிங்
- திருப்பூர் மாவட்டம்…
- தின மலர்
திருப்பூர், டிச. 28: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்ராம் சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குப்படி திருப்பூர் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறிப்படவில்லை என தெரியவருகிறது.
ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டப்படி ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எழுத்து மூலமாக தெரிவித்துக் கொள்ளலாம்.
The post மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது கண்டறியப்படவில்லை: திருப்பூர் மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.