×

திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

திண்டுக்கல், டிச. 28: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:  திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசு காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2024ம் ஆண்டிற்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாதிரிதேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, போட்டி தேர்விற்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.

Tags : DINDIKAL EMPLOYMENT OFFICE ,Dindigul ,TNBC ,Dindigul District Employment Office ,Collector ,Bougodi ,Dindigul Employment Office ,Dinakaran ,
× RELATED வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய்...