- திருப்பூர்
- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…
- தின மலர்
திருப்பூர், டிச. 28: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி என மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட தொகை வழங்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிற தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.725 வழங்க வேண்டும்.
ஆனால் ரூ.534 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் நிர்ணயித்த கூலியை வழங்க கோரியும், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் காலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் காவலாளிகள் உட்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2வது நாளாக போராட்டம் நடந்தது.
The post 2ம் நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.