×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்

 

அவிநாசி, ஜன.12: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இந்திய மருத்துவ சங்கம், சாலை சென்னை கூத்துப்பட்டறை குழுவினர், போக்குவரத்து போலீசார், ரோட்டரி நெக்ஸ்ட்ஜெனரேசன் ஆகியன சார்பில், நடைபெற்ற இந்த நாடக நிகழ்ச்சியில், இதில் சாலை விதிமுறைகளை அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டக் கூடாது என்பது உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர்.  தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக, சாலை பாதுகாப்பை கடைபிடிப்பது குறித்து அனைவரும், உறுதிமொழி எடுத்தனர்.

இதில், இந்திய மருத்துவசங்கம் அவிநாசி தலைவர் டாக்டர் ரமணி, செயலாளர் மாதேஸ்வரி மருத்துவமனை டாக்டர் பிரகாஷ், ரோட்டரி சங்க தலைவர் சதாசிவம், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் நல்லசிவம், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் appeared first on Dinakaran.

Tags : Road Safety Awareness Play ,Avinashi ,Road Safety Month ,Indian Medical Association ,Salai Chennai Koothupattarai ,Rotary Next Generation… ,Safety Awareness ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...