×

திருப்பூரில் ஏடிஜிபி ஆலோசனை

 

திருப்பூர் , ஜன.12: திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர், திருப்பூர் மாவட்ட எஸ்பி, கமிஷனர் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் உள்ள குற்ற சம்பவங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் சேமலை கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மூன்று பேர் கொலை வழக்கு சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

The post திருப்பூரில் ஏடிஜிபி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : ATGB Consulting ,Tiruppur ,ADGB ,Davidson Devasirvatham ,Tiruppur District SP ,West Zone Police ,Tiruppur District ,SP ,Goa ,Erode ,Neelgiri ,Dinakaran ,
× RELATED காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு