- தொழில்துறை
- சிவகங்கை
- சென்னை
- Chipcat
- தொழிற்பூங்கா
- சிவகங்கை மாவட்டம்
- ஷிப்ப்கோட் இண்டஸ்ட்ரியல்
- இலுப்பிகுடி
- அரசனூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிப்கோட் தொழில்துறை பூங்கா
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறது. சிப்காட் தொழில் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமான சிவகங்கையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதன்படி இலுப்பைக்குடி மற்றும் அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தொழில் பூங்கா மூலம் 36,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. குறிப்பாக ஆட்டோ மொபைல்ஸ் உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் சிப்காட்டில் அமைய உள்ளது.
The post சிவகங்கையில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.