சென்னை: லண்டன் சென்று படித்து வந்ததால் அண்ணாமலைக்கு வினோத நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதே சாட்டையை வேறு ஒருவரிடம் கொடுத்து அடிக்கச் சொல்லி இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கிண்டலாக கூறினார். மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது, முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஐபிஎஸ் படித்த அதிகாரியான அண்ணாமலை, 6 மாதம் லண்டனில் சென்று படித்தவர், அவதூறாக பேசி நாகரிகமற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக 48 நாளைக்கு விரதம் இருப்பதாகவும், சாட்டையால் அடித்துக் கொள்வதாகவும் சொல்லியிருந்தார். அவர் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.
ஆனால் அவர் வேறு ஒருவரிடம் சாட்டையை கொடுத்து அடிக்கச் சொல்லி இருக்க வேண்டும்.சிலருக்கு வெப்ப காலத்தில் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை லண்டன் சென்று படித்து வந்ததால் அண்ணாமலைக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.இது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அண்ணாமலை மேற்கொண்ட கழிச்சடைத்தனமான போக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
The post சாட்டையடி விவகாரம் அண்ணாமலைக்கு வினோத நோய் பாதிப்பு: முத்தரசன் கிண்டல் appeared first on Dinakaran.