வெள்ளக்கோவில், டிச.21: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்பு, கேரி பேக்குகள் விற்பனை செய்யப்படுகிறாத என நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து செய்தனர். அப்போது, 20 வணிக கடைகளில் 9 கிலோ கேரி பேக்குகள் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:
நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால், சுற்றுப்புறத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் எளிதில் மக்காத பொருளாக உள்ளது. மழைக்காலங்களில் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு வணிக நிறுவனத்தினர் பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து துணிப்பை மற்றும் சணல் பையை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post 9 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.