×

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.20: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 100 நாட்களும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் வரதராஜ், அலகுராஜன், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்Aதில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு நிதி குறைக்கக் கூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Agricultural Workers Union ,Namakkal ,Namakkal Collector ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்