×

விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல், டிச.20: நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில், இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பாரதி, கல்லூரி முதல்வர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் திருச்சிரோடு, மணிக்கூண்டு, காவல்நிலையம் நிலையம் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

The post விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Tamil Development Department ,Tamil Official Language Law Week ,Namakkal Poet Ramalingam Government Women's College ,Revenue Commissioner ,Parthiban ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்