×

பூதலூர் ஒன்றிய குழு கடைசி கூட்டம் நன்றி தெரிவித்து விடைபெற்ற தலைவர்

திருக்காட்டுப் பள்ளி, டிச.19: பூதலூர் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் கல்லணை செல்லக்கண்ணு தலைமையில் நடந்தது. பூதலூர் ஒன்றிய குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையர் முகமது அமானுல்லா, துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் பரிமளா ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பூண்டி வெங்கடேசன், மதுபாலா, , கேசவமூர்த்தி, தங்க கென்னடி, ரம்யா,பிரேமா, அருமைச்செல்வி, ரேவதி, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் இந்த கூட்டம் கடைசி கூட்டமாக கருதப்பட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தவுடன் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் பொது நிதியிலிருந்து அவர்களின் கவுன்சிலர் பகுதியில் தேவைப்படும் பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்தால் அவற்றை செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது. தலைவர் கல்லணை செல்லக்கண்ணு அனைவரிடத்திலும் இது நாள் வரை ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். முடிவில், ஏபிடிஓ பிரபு நன்றி கூறினார்.

The post பூதலூர் ஒன்றிய குழு கடைசி கூட்டம் நன்றி தெரிவித்து விடைபெற்ற தலைவர் appeared first on Dinakaran.

Tags : Boodalur Union Committee ,Kallanai Chellakkannu ,Commissioner ,Mohammed Amanullah ,Vice Chairman ,Subramanian ,District Committee ,Parimala ,Dinakaran ,
× RELATED பட்டுக்கோட்டையில் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்