- பட்டுக்கோட்டை
- பட்டுக்கோட்டை வருவாய்
- ஆணையாளர்
- ஜெயஸ்ரீ
- பேராவூரணி
- திருவனம்
- வருவாய் ஆணையர்
- பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்
- தின மலர்
பட்டுக்கோட்டை, டிச. 21: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
The post பட்டுக்கோட்டையில் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.