×

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க வேண்டும்: மின்வாரிய அதிகாரி வலியுறுத்தல்

நாமக்கல், டிச.19: சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாயிகள், பகல் நேரத்தில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான, சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி சோலார் மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களைக் கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைக்க முடியும். நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கத்தில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சோலார் பவர் மின்சாரத்தை, அனைத்து விவசாயிகளும் முழுமையாக பயன்படுத்தி, தங்களது விவசாய மின் மோட்டார்களை உபபோகப்படுத்தி தண்ணீர் இறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க வேண்டும்: மின்வாரிய அதிகாரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Namakkal ,Namakkal Electricity Distribution Circle Supervising Engineer’s Office ,Dinakaran ,
× RELATED புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில்...