×

பல்கலை. அளவிலான கோ-கோ போட்டி வெய்க்காலிப்பட்டி கல்லூரி சாதனை

கடையம், டிச.18: கடையம் அருகே வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆண்களுக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் அருள்தந்தை சகாய ஜாண் தலைமை வகித்தார். முதல்வர் குளோரி தேவஞானம் முன்னிலை வகித்தார். வெய்காலிப்பட்டி பங்குத்தந்தை சாக்கோ வர்க்கிஸ் தொடங்கி வைத்தார். போட்டிகளில் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச்சேர்ந்த 9 அணிகள் கலந்து கொண்டன. வெய்க்காலிப்பட்டி, புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடம், நாகர்கோவில், அன்னை வேளாங்கன்னி கல்லூரி இரண்டாம் இடம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி மூன்றாம் இடம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நான்காம் இடம் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு
விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை மைய இயக்குனர் ஆறுமுகம், விளையாட்டுப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா சிங் ரோக்லேன்ட், துணை ஒருங்கிணைப்பாளர் ஜேயிசன் மற்றும் தூத்துக்குடி, வஉசி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிகோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினர். புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவராஜா நன்றி கூறினார்.

The post பல்கலை. அளவிலான கோ-கோ போட்டி வெய்க்காலிப்பட்டி கல்லூரி சாதனை appeared first on Dinakaran.

Tags : Veikalipatti College ,Kadayam ,Manonmaniam Sundaranar University ,St. Joseph's College of Arts and Science ,Veikalipatti ,Arulthandhai Sahay John ,Dinakaran ,
× RELATED மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு