×

பரமக்குடி சாலையில் பயணிகளின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மரம்

பரமக்குடி,டிச.17: பரமக்குடி ஐந்து முனைச் சாலையில், கன மழைக்கு பயணிகள் உயிரை காவு வாங்க காத்திருக்கும் வேப்ப மரத்தை உடனடியாக அகற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது இதனால், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் பரமக்குடி பகுதியில் தொடர்ந்து மரங்கள் சாய்வதும், வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்து உயிர்பலிகள் ஆகி வருகிறது.

பரமக்குடி ஐந்து முனைச் சாலை ஐயப்பன் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள வேப்பமரம் சாய்ந்து விழும் நிலையில், அபாயகரமாக உள்ளது. எப்பொழுதும் பேருந்துக்காக சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் நிற்கும் நிலையிலும், அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளதால் மரம் சாய்ந்து உயிர் பலி வாங்கும் நிலையில் உள்ளது. ஆகையால், நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மரத்தினை அகற்றி உயிர்ப்பலியை தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பரமக்குடி சாலையில் பயணிகளின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மரம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi Road ,Paramakudi ,Paramakudi Five-junction Road ,Tamil Nadu ,
× RELATED அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்