- காட்பாடி
- சாலை கலெக்டர்
- வேலூர்
- அஸ்வினி
- பெரியபாலம்பாக்கம்
- கணியம்பாடி
- வேலூர் ஆட்சியர்
- காட்பாடி சாலை கலெக்டர்
- தின மலர்
வேலூர், டிச. 17: வேலூர் அடுத்த கணியம்பாடி பெரியபாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி(28). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை 9 மணியளவில் அஸ்வினி தனது அண்ணன் பார்த்தீபனுடன் மொபட்டில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். காட்பாடி சாலை தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட்டில் இருந்து தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி அஸ்வினி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சேலான காயங்களுடன் பார்த்தீபன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று பிற்பகல் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: காட்பாடி சாலையில் 2 நாட்களில் 2 விபத்துக்கள் நடந்து 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று(நேற்று) முதல் காட்பாடி சாலையில் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கால்வாய் கட்டுமான பணி முடியும் வரை காட்பாடி சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. பணிகள் முடியும் வரை இந்த நடைமுறை தொடரும். மேலும் ஒப்பந்ததாரர் சாலையோர மண் குவியலை தினமும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கும்படி ரோந்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் ஜானகி, வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், தாசில்தார் முரளி, போக்குவரத்து எஸ்ஐ ரஜினி உள்ளிட்டோர் இருந்தனர். இந்நிலையில் கலெக்டர் உத்தரவை தொடர்ந்து காட்பாடி சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கான தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், லாரிகள் பழைய பைபாஸ் வழியாக மக்கான் சந்திப்புக்கு சென்று புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றது.
The post காட்பாடி சாலையில் பஸ், லாரிகள் செல்ல தடை கலெக்டர் நேரில் ஆய்வு வேலூரில் மொபட் மீது லாரி மோதி பெண் பலி appeared first on Dinakaran.