×

வேலூர் மத்திய சிறையில் தடையை மீறி பறந்த ட்ரோன் போலீசார் விசாரணை

வேலூர், டிச.17: வேலூர் மத்திய சிறை வளாகத்தில் தடையை மீறி பறந்த ட்ரோனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 800க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்தும் செல்போன், கஞ்சா ஆகியவற்றை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல் கடந்த வாரம் சுவரில் மறைத்து வைக்கப்பட்ட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மத்திய சிறை வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தடையை மீறி சிறை வளாகத்தில் பறந்த ட்ரோன் 1வது பிளாக் அருகே உள்ள மரத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலர்கள், மரத்தில் ஏறி ட்ரோனை கைப்பற்றினர். பின்னர் அதனை பறிமுதல் செய்து பாகாயம் போலீசில் ஒப்படைத்தனர். பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்தில் தடையை மீறி ட்ரோன் பறக்க விட்டவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் மத்திய சிறையில் தடையை மீறி பறந்த ட்ரோன் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vellore Central Jail ,Vellore ,Dinakaran ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...