×

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நாளை குசேலன் தின விழா

பாலக்காடு, டிச.17: கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் குசேலன் தினவிழா நாளை (18ம் தேதி) நடைபெறுகிறது. விழாவையொட்டி குஜேலவிரத கதகளி, சங்கீதார்ச்சணை, நாட்டிய நிகழ்ச்சிகள் குருவாயூர் கோயில் மேல்பத்தூர் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நைவேத்தியமாக அவல் படைத்து, பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தேங்காய், சர்க்கரை, நெய், சுக்கு, சீரகம் ஆகியவை கலந்த அவல் மூலவருக்கு நைவேத்தியம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விழாவில், தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேல்பத்தூர் கலையரங்கில் கதகளி, மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சிகள், சங்கீத அர்ச்சனை தேவஸ்தான நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ளது. கிருஷ்ண பிரானை அவரது நண்பர் குசேலன் அவல் பொதியுடன் காண வந்த காட்சியுடன் கதகளி நாட்டியம் இடம்பெறுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் புதன்கிழமை குருவாயூரில் விமர்சையாக நடத்தப்படுகிறது.

The post குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நாளை குசேலன் தின விழா appeared first on Dinakaran.

Tags : Guruvayur Krishna Temple ,Kuselan Day ,Palakkad ,Kerala ,Kujelavritha Kathakali ,Sangeetharchanai ,Guruvayur Temple Melbattur Art Gallery ,
× RELATED நெல்லியாம்பதி மலைப்பாதையில்...