- கார்த்திகை பௌர்ணமி
- உஞ்சினி கொப்பட்டியம்மன் கோவில்
- அரியலூர்
- கொப்பட்டியம்மன் கோவில்
- உஞ்சினி
- செந்துறை
- அரியலூர் மாவட்டம்
- திருக்கார்த்திகை பௌர்ணமி
- கொப்பட்டியம்மன்
- பாவையம்மன்
- பாப்பாத்தியம்மன்
- வீரனார்
- கற்புசாமி…
- கோவில்
அரியலூர், டிச. 16: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த உஞ்சினி கிராமத்திலுள்ள கொப்பாட்டியம்மன் கோயிலில் திருக்கார்த்திக்கை பௌர்ணமியையொட்டி 1008 விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
முன்னதாக கொப்பாட்டியம்மன், பாவையம்மன், பாப்பாத்தியம்மன், வீரனார் மற்றும் கருப்புசாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் 1008 விளக்கு ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலத்தெய்வ பக்தர்கள் செய்திருந்தனர்.
The post உஞ்சினி கொப்பாட்டியம்மன் கோயிலில் கார்த்திகை பௌர்ணமி வழிபாடு appeared first on Dinakaran.
