×

₹13.83 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல், டிச.16: நாமக்கல் உழவர் சந்தையில், சுமார் 32 டன் காய்கறிகள், பழங்கள் ₹13.83 லட்சத்துக்கு விற்பனையானது. நாமக்கல் உழவர் சந்தைக்கு நாமக்கல், எருமைப்பட்டி, சேந்தமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தினமும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்து செல்கின்றனர். மாலை நேரங்களிலும் நாமக்கல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை மாதம் முடிவடையும் நிலையில், இன்று மார்கழி மாதம் தொடங்க உள்ளது. ஐயப்பன் சீசன், கார்த்திகை தீபம், பிரதோசம், ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்காலம் தொடங்குவதால் பலர் அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். நேற்று வழக்கத்தை விட உழவர் சந்தையில், விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. மொத்தம் 203 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 26,880 கிலோ காய்கறிகள் மற்றும் 5,405 கிலோ பழங்கள், 10 கிலோ பூக்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 295 கிலோ விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனை 6 ஆயிரத்து 459 பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். நேற்று ₹13.83 லட்சத்திற்கு, உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது சந்தை நிர்வாக அலுவலர் சேகர்
தெரிவித்தார்.

The post ₹13.83 லட்சத்திற்கு காய்கறி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Farmers' Market ,Erumaipatti ,Senthamangalam ,Farmers' Market ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்