×

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணினி ஆபரேட்டர் பணியிடத்திற்கான விண்ணப்பம் வரவேற்பு

மயிலாடுதுறை, டிச.16: மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள குழந்தைகள் நலக் குழுவிற்கு கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.11.916/- (1 பணியிடம்) தொகுப்பூதியத்தில் பணிபுரிய 12வது தேர்ச்சி மற்றும் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (சீனியர் கிரேட்) முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும். மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும். https://mayiladuthurai.nic.in/ > என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ம் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல்-609 305 என்ற முகவரியில் 20.12.2024க்குள் அனுப்பி வைக்க வேண்டும். என்று மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணினி ஆபரேட்டர் பணியிடத்திற்கான விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Child Protection Unit ,Mayiladuthurai ,Child Welfare Committee ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்