×

மயிலாடுதுறை நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

 

மயிலாடுதுறை,டிச.13:மயிலாடுதுறை நகராட்சி நகர் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கப்படுகிறதா? என்று கடைகளில் ஆய்வு செய்தனர். சம்மந்தப்பட்ட கடையை பூட்டி சீல் செய்திடவும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில், நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் படியும், நகர் நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி தலைமையில் துப்புரவு அலுவலர் டேவிட் பாஸ்கர் ராஜ், துப்புரவு ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி, தூய்மை பாரத இயக்கம் மேற்பர்வையாளர் சசிகலா கொண்ட குழுக்கள் டபீர்தெரு, தருமை சாலை, சீர்காழிரோடு, திருவிழந்தூர்திருமஞ்சன வீதி தரங்கை சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் தரங்கை சாலையில் உள்ள கோகுல் ஸ்டோர் என்ற கடையில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்கள் சுமார் ரூ.3000 மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடையை நகராட்சி ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

The post மயிலாடுதுறை நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Nagar ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED சீர்காழி நகராட்சி பகுதியில்...