×

காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

 

காரியாபட்டி, டிச.16: கல்குறிச்சியில் காச நோய் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை சார்பில் காச நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார முகாம் காரியாபட்டி கல்குறிச்சி அரசு பள்ளியில் நடைபெற்றது. காச நோய் இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு திட்டத்தை 100 நாள் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

காச நோய் இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் காசநோய் பற்றியும், பரவும் விதம், குணமாகும் தன்மை, காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பற்றியும் அரசு மருத்துவர் விக்னேஷ் பேசினார். கூட்டத்தில் தலைமை ஆசிரியை மற்றும் மருந்தாளுனர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர். காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் தங்ககுமார் நன்றி கூறினார்.

The post காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tuberculosis Prevention Awareness ,Camp ,Kariyapatti ,Kalkurichi ,Kariyapatti Kalkurichi Government School ,Virudhunagar District Medical Department ,Tuberculosis Prevention Awareness Camp ,Dinakaran ,
× RELATED வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்