×

வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்

 

நாமக்கல், டிச.9: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும், மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை தொழிலாளர் துறை வலைதளத்தில் பதிவு செய்ய தாலுகா வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மோகனூர், நாமக்கல், திருச்செங்கோடு தாலுகா அலுவலகங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

நாளை (10ம்தேதி) ராசிபுரம் தாலுகா அலுவலகம், 13ம்தேதி சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம், 17ம்தேதி சங்ககிரி தாலுகா அலுவலகம், 20ம்தேதி குமாரபாளையம் தாலுகா அலுவலகம், 24ம்தேதி பரமத்தி தாலுகா அலுவலகங்களிலும் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே புலம் பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் அலுவலகத்திற்கு வந்து, நிறுவனத்தில் பணிபுரியும் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை தொழிலாளர் துறை வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : camp ,Namakkal ,Uma ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு..!!