×

அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி பெண் உள்பட 6 பேரிடம் ₹4.85 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 13: வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி புதுச்சேரி பெண் உள்பட 6 பேரிடம் ₹4.85 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு, வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ஜெனிபர் ₹2.21 லட்சத்தை முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர் அதில் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை, அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. புதுவை வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகசாமி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குசந்தையில் முதலீடு செய்வது குறித்து பேசியுள்ளார்.

இதனை நம்பி முருகசாமியும், மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் ₹1 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். புதுவை மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ₹39 ஆயிரம், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் ₹81 ஆயிரம், திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ₹13 ஆயிரம், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாண்டில்யன் என்பவர் ₹31 ஆயிரம் என மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ₹4.85 லட்சத்தை மோசடிக்காரர்களிடம் ஏமாந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி பெண் உள்பட 6 பேரிடம் ₹4.85 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Cybercrime Police ,Puducherry Gurumpet ,Dinakaran ,
× RELATED கடந்த ஒரு மாதத்தில் மட்டும்...