×

தொடர்மழை காரணமாக 22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

குன்றத்தூர்: தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி நீர்மட்டத்தை நெருங்கிவருகிறது. 22 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக மாறியுள்ளதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் வருவதால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி உயரம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.18 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2903 மில்லியன் கன அடி. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 713 கன அடி மழைநீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட்டவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பது வழக்கம். இன்றும், நாளையும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 22 அடியை தொட்டவுடன் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

The post தொடர்மழை காரணமாக 22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Serverambakkam Lake ,Gunathur ,Lake Sermarambakkam ,Tamil Nadu ,northeastern ,SOUTHEAST BANGLADESH ,ContinuousCerambakkam Lake ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்று வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது