×

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.12:பொம்மிடி அடுத்த பையர்நத்தம், கதிரபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி(29). இவர் கதிரிபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கலெக்டரிடம் புகாரளித்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி தலைமையில் வருவாய் துறையினர் கதிரிபுரத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில் நில அளவை செய்தனர். பின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, துணை தாசில்தார் சக்திவேல், ஆர்.ஐ விமல், வி.ஏ.ஓ., இளங்கோவன் உடனிருந்தனர்.

The post அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Munusamy ,Katirapuram ,Pommidi ,Kathripuram ,Paprittipatti ,Tahsildar Valli ,Katiripuram ,
× RELATED கூலி தொழிலாளி மாயம் மனைவி போலீசில் புகார்