×

கூலி தொழிலாளி மாயம் மனைவி போலீசில் புகார்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி பழைய சாலூரை சேர்ந்தவர் வைதீஸ்வரன்(30), கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வைத்தீஸ்வரன் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தவிடு கடையில் வேலை செய்து வந்தார். தினமும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்ற வைதீஸ்வரன் மாலை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து தமிழரசி ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகாரளித்தார்‌. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூலி தொழிலாளி மாயம் மனைவி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Vaitheeswaran ,A. Pallipatti Old Salur ,Tamilarasi ,Vaideeswaran ,Papriprettipatti ,
× RELATED அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்