×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடி, டிச. 12: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், முதன்மைச் செயலாளரும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருமான பிரகாஷ் தலைமை வகித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,District Survey Officer ,Prakash ,North East Monsoon ,Thoothukudi district ,North-East ,Thoothukudi District Collector ,Dinakaran ,
× RELATED முக்காணி தாமிரபரணி ஆற்றில்...