×

பாரூர் பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மில்லியன் கனஅடி வீதம் 12.12.2024 முதல் 20.04.2025 முடிய 130 நாட்களுக்கு மொத்தம் 355.00 மில்லியன் கனஅடி (தற்போது 233.625 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மீதம் உள்ள 121.375 மில்லியன் கனஅடி நீரினை எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு) இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post பாரூர் பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Parur Periya Lake ,Krishnagiri ,Krishnagiri district ,Bochampalli circle ,Parur big lake ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள்...