×

ஊட்டியில் அகல் விளக்கு விற்பனை ஜோர்

 

ஊட்டி, டிச.11: நாளை மறுநாள் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில் ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் அகல் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், நிறுவனங்கள் மற்றும் கோயில்களில் அகல் விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். குறிப்பாக, வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகளை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அகல்விளக்குகளை வாங்கும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ஊட்டியில் மார்க்கெட், லோயர் பஜார், அப்பர் பஜார் மற்றும் கமர்சியல் சாலை போன்ற பகுதிகளில் ஏராளமான நடமாடும் கடைகள் முளைத்துள்ளன. பல வியாபாரிகள் அகல் விளக்குகளை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு விளக்கு ரூ.5 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இந்த விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் வாங்கிச் செல்ல தற்போது மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

The post ஊட்டியில் அகல் விளக்கு விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Ooty Jore ,Ooty ,Karthikai ,Deepam ,Kartika Deepa Thirunal ,
× RELATED ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில்...